தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கான தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கிது. ரயில்களுக்கான முன் கூட்டிய பயணப் பதிவுக்கான கால அவகாசம் 120 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இந்தாண்டு தீபாவளி முன்பதிவு இன்று தொடங்கியது.       


இருப்பினும், இந்தாண்டு சற்று மந்தமாக இருப்பதாக ரயில்வே துறைகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கூறுகையில், "கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு முதல் ரயில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.  கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னால் ரயில்வே மூலம் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, நிறையே தடங்களில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீபாவளி முன்பதிவில் தற்போது வரை, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் 80 சதவிகித டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. பிற இடங்களுக்குச் செல்லும் ரயில்களில் 50க்கும் குறைவாகவே முன்பதிவு நடந்துள்ளது" என்று தெரிவித்தனர்         


கொரோனா தொற்றுகள் குறைந்து வரும் காரணத்தால், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே உயர்த்தி வருவதாக இந்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்தது. உள்ளூர் நிலவரம் மற்றும் பயண சீட்டுகளுக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.  




பாதுகாப்பான பயணத்திற்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே, ரயில் பயணிகளுக்கு முன்னதாக வேண்டுகோள் விடுத்தது.


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,    


1. முகமூடிகள் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்


2. தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.


3. கவுண்டர்கள் மற்றும் தளங்களில் சமூக தூரத்தைப் பராமரிக்கவும்.


4. காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.


5. கொரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமை / தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது வைரஸுக்கு பாஸிடிவ் ஆக சோதிக்கப்பட்டால் பயணத்தைத் தவிர்க்கவும்.


6. கை சுத்திகரிப்பு / சோப்பு போன்ற கொரோனா பாதுகாப்பு கருவிகள் ,உணவு, நீர் போன்றவற்றை பயணத்தின் போது எடுத்துச்செல்லவும்.


7. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.


8. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைத் தவிர, ஒவ்வொரு மாநில அரசும் இ-பதிவு / இ-பாஸ், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயப்படுத்தியுள்ளது. அவை பயணத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் ரயில்வே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


மேலும், படிக்க: 


பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?