உலகப்புகழ் பெற்ற World Press Photo Awards விருதை மதுரையைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் வென்றுள்ளார். இந்தியாவில் இருந்து இதுவரை நான்கு பேர் மட்டுமே வென்றிருக்கும் இந்த விருதை  புலிகளுக்கும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக செந்தில் குமரன் வென்றிருக்கிறார். 


உலக அளவில் 130 நாடுகளில் இருந்து 4,066 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் விருதுக்கான தேர்வு பட்டியலில் 23 நாடுகளை சேர்ந்த 24 புகைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கண்ட அளவில் இந்த சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்ற செந்தில் குமரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 






இது குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “கடந்த 2001-ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக புகைப்பட துறையில் இயங்கி வருகிறேன். ஆனால், கடைசி 10 ஆண்டுகளாக புலிகளும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படங்களை ஆவணப்படுத்தி வருகிறேன். இது என்னுடைய 20வது விருதாகும். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகளுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான World Press Photo Awards விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ஃபோட்டோகிராபி என்பது  என்னுடைய அதன் மூலமாக வெளிப்படும் எனது குரல். ஒரு புகைப்படம் என்பது வீரியமாக இருக்க வேண்டும். அதில் பல கேள்விகள் எழ வேண்டும். ஒரு நல்ல புகைப்படம் என்பது பார்ப்பவர்களை அந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடி பயணப்பட வைக்க வேண்டும். அந்த மாதிரியான புகைப்படங்களை தேடிச் செல்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். 


”மதுரையின் சிறந்த கலைஞர்களில் ஒருவரும் அன்பு நண்பருமான செந்தில்குமார் அவர்கள் உலகப் புகழ்பெற்ற World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. எனவும் பல்லுயிர் காப்பில் முனைப்போடு செயலாற்றி கடந்த பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த அவரது பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் இது” என எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண