மாண்டஸ் புயல் நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதியால் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




1. கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டுள்ளது


2. உள்ளூர் ஊடகம், தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


3. மீனவ மக்கள் மற்றும் கடலோர மக்களுக்கு அறிவுரை வழங்க மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


4. கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்புகின்றன




5. அனைத்து துறைமுகங்களும் நங்கூரத்தில் இருக்கும் கப்பல்களை எச்சரிக்கவும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


6. கரையோரப் பாதுகாப்புக் குழுவானது அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் கோரப்பட்டுள்ளது


7. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஆயில் ரிக்குகளும், கடலோர நிறுவல்களும் கோரப்பட்டுள்ளன.


 கடலோர காவால்படையினர் மட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்


மழை வெள்ள பாதிப்புகளில்  இருந்து மக்களை காக்கும் வகையில்  தமிழ்நாடு பேரிடர் மீட்பு  குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அதே போல்  நாகை மாவட்டத்தில் ஏற்படும் மழை மற்றும் புயல் பாதிப்புகளை சமாளிக்க 25 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் கூடுதலாக வருகை தந்துள்ளனர்.


கன மழை மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்யவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள விழுப்புரம், நாகை, சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.