Independence Day 2024 LIVE : 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Independence Day 2024 LIVE Updates: இன்று 78-வது சுதந்திர தினம். இன்றைய சிறப்பு நிகழ்வுகள், உரைகள், முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபிநாடுடன் இணைந்திருங்கள்
78வது சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவிப்பு!
"விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹20,000ல் இருந்து 21,000ஆக உயர்த்தி வழங்கப்படும்" -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
"முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்; இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை!
டெல்லி செங்கோட்டையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையுடன் வந்து கொண்டிருக்கிறார்.
சுதந்திர தின விழா கொண்டாட்டம் - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்ற உள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
Background
Independence Day 2024 LIVE Updates:
Independence Day Wishes 2024 in Tamil: 78-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கான வாழ்த்து மெசேஜ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் நாளை (15.08.2024) கொண்டாடப்பட உள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு இந்தியா ஆகஸ்ட்,15, 1947-ல் விடுதலை பெற்றது.
நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்றைய நாளில் சுதந்திர பெறுவதற்காக ஏராளமானோர் தன்னலமின்றி போராடி தியாகம் செய்திருக்கின்றனர். சுதந்திர தினத்தன்று நாட்டின் வரலாறை மறக்காமல் இருக்க உறுதி ஏற்போம்.
சுதந்திர தின வாழ்த்து மேசெஜ்:
- நாடு சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த ஏராளமான விடுதலை போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- இந்தியாவில் வாழ்வது குறித்து பெருமை கொள்வோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- விடுதலை உணர்வை நமக்குள் விதைத்த தலைவர்களை வணங்குவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! இனிய நாளாய் அமையட்டும்.
- நாடு மேன்மேலும் வளர்ச்சியடையட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- விடுதலை உணர்வு என்பது மிகவும் அற்புதமானது. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களை வணங்குவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- தேசிய கொடி எப்போதும் வானுயர்ந்து பறக்கட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- அன்பை மட்டுமே பரப்புவோம். வெறுப்பு உணர்வை தவிர்ப்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நாட்டின் பெருமையை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நாட்டின் வளத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- விடுதலை உணர்வை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- ஒற்றுமையின் வலிமையை உணர்வோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நம் நாடு சுதந்திரம் அடைந்ததை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நாம் பெற்றிருப்பது பரிசு. விடுதலை என்பது நமக்கு கிடைத்த பரிசு. அதன் மதிப்பை உணர்ந்து செயல்பட பொறுப்பேற்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- நம் நாடு தொடர்ந்து வளர்ச்சி அடையட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
- சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -