காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,608 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 21,821 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 27,088 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, நிலவரப்படி வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.18 அடியாக இருந்தது. அணை பகுதிகளில் 1.மி மீ மழை பெய்தது
கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை நிலவரப்படி வினாடிக்கு, 1,941 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6 மணி நிலவரப்படி, மழை காரணமாக 3,419 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.
ஆத்துப்பாளையம்அணை
கரூர் மாவட்டம், பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நங்காஞ்சிஅணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39. 37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்கால்களில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில், 3 மி மீ மழை பெய்தது.
பொன்னனியாறு அணை
கரூர் மாவட்டம், உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை.
குளித்தலை பாசன கிளை வாய்க்கால் மீட்ட கோரி மனு.
குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி புலவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் கோபால தேசிகன் கலெக்டர் இடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது. குளித்தலை தென்தலை வாய்க்காலில் இருந்து பிரிந்து சுமார் 515 ஏக்கர் நிலங்களுக்கு பாசன அழிக்கும் கிளை வாய்க்கால் உள்ளது. குளித்தலை நகர விஸ்தரிப்பு காரணமாக இந்த கிளை வாய்க்கால் கழிவுநீர் வடிக்காலாக மாறியுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் உருவாகிறது. எனவே பாசனகளை மீட்டெடுத்து விவசாயத்துக்கு ஏற்றார் போல் தூர்வாரி சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.