நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை நிலவரப்படி 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1008 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 89.24 அடியாக இருந்தது. அணை பகுதிகளில் 13 மில்லி மீட்டர் மழை பெய்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 1,477 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி 1,941 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மாயனூர் கதவணையின் நீர்மட்டம்.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து, 986 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 21 ஆயிரத்து, 821 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் 21 ஆயிரத்து,821 கன அடியும் தண்ணீரும், மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்.
க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணையின் நீர்மட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால் நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்கால்களில் தலா 10 கன அடி உபரின் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில் மூன்று மில்லி மீட்டர் மழை பெய்தது.
பொன்னனியாறு அணையின் நீர்மட்டம்.
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28.16 அடியாக இருந்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு. கரூரில் 2.2 மில்லி மீட்டரும், அணைப்பாளைத்தில் 2.8 மில்லி மீட்டரும், குளித்தலையில் 9.4 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 32 மில்லி மீட்டரும், மாயனூரில் 5 மில்லி மீட்டரும், பஞ்சபட்டியில் 34 மில்லி மீட்டரும், கடவூரில் 1.3 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 2.1 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 56.8 மில்லி மீட்டரும் ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 12.13 மில்லி மீட்டர் மழை பதிவானது.