புதுச்சேரியில்‌ தேர்வு செய்யப்பட்ட அரசு இதுவரை செயல்பாட்டுக்கு வராத நிலையில்‌, அரசியல்‌ கட்சிகள்‌ பேரிடர்‌ நேரத்தில்‌ பதவி மோகத்தால்‌ மக்கள்‌ பணியாற்ற தாமதம்‌ செய்வதாக மக்கள்‌ குற்றம்‌ சாட்டியுள்ளனர்‌.



புதுச்சேரியில்‌ நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்‌ தேசிய ஜனநாயக கூட்டணியில்‌ இடம்பெற்றுள்ள என்‌.ஆர்‌. காங்கிரஸ்‌ 10 இடங்களிலும்‌, பாஜக 6 இடங்களில்‌ வெற்றி பெற்றது. தொடர்ந்து பாஜக எம்‌எல்‌ஏக்கள்‌ ஆதரவு கடிதத்துடன்‌ கவர்னர்‌ தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரினார்‌. இதனை தொடர்ந்து கடந்த7ம்‌ தேதி முதல்வராக ரங்கசாமி மட்டும்‌ பதவியேற்‌றுக் கொண்டார்‌.



அமைச்சரவையை இறுதி செய்து 2ம்‌ தேதி ஒட்டுமொத்தமாக பதவியேற்கலாம்‌ என்ற பாஜக கூறியதை ரங்கசாமி ஏற்கவில்லை. மேலும்‌ பாஜக துணை முதல்வர்‌ பதவி கூடுதலாக ஒரு அமைச்சர்‌ பதவியை வழங்குமாறு ரங்கசாமியிடம்‌ கோரியது. புதுச்‌சேரி யூனியன்‌ பிரதேசத்தில்‌ துணை முதல்வர்‌ பதவியும்‌, கூடுதலாக ஒரு அமைச்சர்‌ பதவியை வழங்க இடமில்லை யென தெரிவித்தார்‌. ஆனால்‌ பாஜக, முதல்வராக பொறுப்‌பேற்றவுடன்‌ இதனை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம்‌ அனுப்பினால்‌ அனுமதி பெற்றுத்தருவதாக தெரிவித்‌தது. நீங்கள்‌ கொடுப்பதாக இருந்தால்‌ எனக்கு ஒன்றும்‌ பிரச்னையில்லை என ரங்கசாமி ஆமோதித்ததாக பாஜகவினர்‌ தெரிவித்தனர்‌. இதையடுத்து 9ம்‌ தேதி புதிய அமைச்சரவை பதவியேற்கும்‌ என கூறப்பட்டது. இதற்கிடையே ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால்‌ சென்னையில்‌ சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்று விட்டார்‌. முன்னதாக தற்காலிக சபாநாயகர்‌ நியமிக்கும்‌ கோப்பினை துணை நிலை ஆளுநருக்கு ரங்கசாமிஅனுப்‌பினார்‌. ஆனால்‌ அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன்‌ காரணமாக வெற்‌றிப்‌ பெற்றும்‌ எம்‌எல்‌ஏக்கள்‌ முறைப்படி பதவியேற்க முடியாத நிலை நீடிக்கிறது.


அதேபோல் துணை முதல்வர்‌, கூடுதலாக ஒரு அமைச்சர்‌ என்ற திட்டத்திற்கும் ரங்கசாமி இதுவரை பரிந்துரைக்கவில்லை. இதனால்‌ பாஜகவுக்கும்‌-ரங்கசாமிக்கும்‌ இடையே பனிப்‌போர்‌ நடந்து வருவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும்‌ விதமாக 3 நியமன எம்‌எல்‌ஏக்களை பாஜக அதிரடியாக நியமனம்‌ செய்‌தது. இதனால் தனது பலத்தை 9 ஆக அதிகரித்து கொண்டதோடு, 3சுயேச்சைகள்‌ ஆதரவுடன்‌ சட்டசபையில்‌ பாஜக பலம்‌ பெற்றது. இது போன்ற நிலையில்‌ சிகிச்சை முடிந்து ரங்கசாமி புதுச்சேரி திரும்‌பினார்‌. எனவே அனைத்து பிரச்னைகளுக்கும்‌ தீர்வு ஏற்படும்‌ என எதிர்பார்க்கப்‌பட்டது. அனால்‌ மருத்துவர்‌ ஆலோசனைப்படி லாசுப்‌பேட்டையில்‌ உள்ள வீட்டில்‌ ரங்கசாமி தனிமைப்படுத்தி கொண்டார்‌. எம்‌எல்‌ஏக்கள்‌ உள்ளிட்ட யாரையும் சந்திக்க மறுத்து விட்டார்‌. மேலும்‌ பாஜகவும்‌ அடுத்த கட்டத்‌துக்கு செல்லாமல்‌ அமைதியாகிவிட்டது. ரங்கசாமியிடம்‌ அமைச்சரவை தொடர்பாக எதுவும்‌ கேட்க வேண்டாம்‌. நாம்‌ நம்முடைய கோரிக்‌கையை சொல்லிவிட்டோம்‌. அதற்கு மேல்‌ அவர்‌ முடிவு எடுக்கட்டும்‌. அதுவரை அமைதியாக இருக்குமாறு பாஜக எம்‌எல்‌ஏக்களுக்கு மேலிட பொறுப்பாளர்‌ நிர்‌மல்குமர்‌ சுரானா தெரிவித்‌துவிட்டார்‌.





இது போன்ற பிரச்னைகளால்‌ வாக்கு எண்ணிக்கை முடிந்து 20 நாட்‌களை கடந்து விட்ட போதிலும்‌ தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின்‌ செயல்பாடு நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாகபேரிடர் நேரத்தில்‌ களப்பணியாற்றவும்‌, அரசுக்கு ஆலோசனை வழங்கும்‌ வகையில்‌ அமைச்சரவை பொறுப்‌பேற்காதது மக்களிடம்‌ கடும்‌ அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது .ஓட்டுப் போட்டு அரசை தேர்வு செய்துவிட்ட பிறகும்‌ இலாகா, பதவி, துணை முதல்வர்‌ என தனிப்பட்ட காரணங்களுக்காக அரசை செயல்பாட்டுக்கு கொண்‌டுவராமல்‌ காலம்‌ தாழ்த்துவது என்‌. ஆர்‌ காங்கிரஸ்‌ பாஜகவின்‌ மேல்‌ மக்களிடம்‌ வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒப்பிட்டு கொரோனா கடந்த அலையில் நாராயணசாமியின்‌ பணிகளை மக்கள்‌ நினைவு கூர்கின்றனர்‌. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றும்‌ இன்று வரை  குடியரசு தலைவர்‌ ஆட்சி தான்‌ தொடர்வதாக மக்கள்‌ கருதுகின்றனர்‌.



குறிப்‌பாக மிக முக்கியமான இந்த நேரத்தில்‌ சுகாதாரத்துறை அமைச்சரின்‌ பங்களிப்பு மிக அவசியமானது. ஆனால்‌ அந்த துறையின்‌ அமைச்சர்‌ யார்‌? என்று முடிவு செய்யாதது மிகவும் வேதனையாக இருப்பதாக கூறுகின்றனர்‌. உங்களின்‌ பதவிசண்டையை தூக்கி வீசிவிட்டு மக்கள்‌ பணியாற்ற வருமாறும்‌ பொதுமக்‌கள்‌ அழைப்பு விடுத்துள்ளனர்‌. இது குறித்து என்‌.ஆர்‌. காங்கிரஸ் தொண்டர்களிடம்‌ கேட்டபோது எந்தநேரத்தில்‌ எதைசெய்ய வேண்டும்‌ என முதல்வருக்கு தெரியும்‌. மருத்‌துவமனையில்‌ இருந்து இப்‌போதுதான்‌ வந்திருக்கிறார்‌. அடுத்த மாதம்‌ 15‌ தேதிக்குள்‌ அமைச்சரவை பொறுபேற்றுக்கொள்ளும் . அதன்பிறகு பாருங்கள் மிகச்சிறப்பான ஆட்சியை ரங்கசாமி வழங்குவார்‌ என தெரிவித்தனர் .