கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவரது எதிர் வீட்டில் உள்ள அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். துர்கா தேவி பிற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஏஹயா பாட்ஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு பேரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவரது எதிர் வீட்டில் உள்ள அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். துர்கா தேவி பிற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஏஹயா பாட்ஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு பேரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
கரூரில் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோரிடத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மனு வழங்க புதுமண தம்பதிகளாக மாலையும், கழுத்துமாக வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, துர்காதேவி கூறியதாவது, "ஏஹயா பாட்ஷாவிடம் நான் போனில் மெசேஜ் அனுப்பும் போது வீட்டில் தெரிந்து விட்டது. அப்போது பெற்றோர்களிடம் கூறினேன். நான் அவரை காதல் செய்கிறேன். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள். நான் அவரை மட்டும் தான் திருமணம் செய்வேன். வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினேன். இந்த காலத்தில் மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதும், ஜாதி மாற்றி திருமணம் செய்து கொள்வதும் அதிக இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. மனம் ஒத்து போனால் எதற்கு ஜாதி மதம் எல்லாம் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் நம்முடைய உறவினர்கள் அதெல்லாம் ஏத்துக்க மாட்டார்கள் என்று கூறி மறுத்து விட்டனர். பற்றி பெற்றோர்களிடம் சொன்னதற்கு அவர்கள் மதம் மாற்றி எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். நம் உறவினர்கள் எப்படி அதற்கு ஒத்துழைப்பார்கள். அப்படி திருமணம் செய்து வைத்தால் நம் உறவினர்கள் யாரும் நம்மிடம் பேச மாட்டார்கள் என்று கூறி பெற்றோர்கள் மறுத்து விட்டனர். இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ விடுங்கள் என்று இந்த தம்பதியினர் கூறியுள்ளனர். துர்கா தேவிக்கு வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. துர்கா தேவிகா அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை நான் வீட்டில் சொல்லியும் பெற்றோர்கள் கேட்கவில்லை என்று கூறினார். அதனால் தான் அவசர அவசரமாக எனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறினார்.
துர்கா தேவி பிற்படுத்தப்பட்ட ஜாதி, ஏஹயா பாட்சா முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். துர்கா தேவி இந்து மதத்தைச் சார்ந்தவர், ஏகையா பாட்ஷா முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். பலமுறை பெற்றோர்களிடம் காதலிப்பதாக கூறியும் அவர்கள் மறுத்தனர். அந்தப் பெண், ஏஹயா பாட்சா இல்லை என்றால் இறந்து விடுவேன் என்று கூறியும் அவர்களின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆதலால், அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் கோவிலில் இரண்டு பேரும் மற்றும் அவரது நண்பர்களும் சென்று திருமணத்தை நடத்தி கரூருக்கு வந்துள்ளனர். வெளியே சென்றால் பெற்றோர்கள் எங்களை கொன்று விடுவார்கள். அதனால், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல் கண்காணிப்பு அலுவலரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.