1. நெல்லையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரமசிவன் வேடமணிந்து காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
2. நெல்லையில் கடந்த 10 நாட்களாக சீரான குடிதண்ணீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
3.திருவண்ணாமலையில் பட்டியலின மக்களின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கைது செய்யக்கோரி நெல்லையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரியம் மாறாமல் கரைவலை மீன் பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விசைப்படகுகள் மீன்பிடிப்பால் கரைவலை மீன் பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
5. சிவகங்கை அருகே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
6. சிவகங்கை தெப்பக்குளம் நிரம்பியுள்ளது. இக்குளத்தில் குளிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை தெப்பக்குளத்தில் கவுரி விநாயகர் கோயில் எதிரே உள்ள படித்துறை அருகே 33 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது.
7. தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கொரோனாவால் உயிரிழந்தவருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
8. முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்மையால் அணையின் நீர் மட்டம் 137 அடியாக உள்ளது.
9. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கோட்டூரில் ‘நிலாப்பெண்' பாரம்பரிய திருவிழா ஊர் மக்கள் முன்னிலையில் விடிய விடிய நடந்தது.
10. சிவகங்கை மாவட்டம் முத்தூர் வாணியங்குடியில் முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருளின் எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொல்லியல் ஆர்வலர் புலர்வர் காளி ராசாவுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!