"கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது"
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையில் தொடர் மழை பதிவாகவில்லை என்றாலும், ஒவ்வொரு பகுதியில் விட்டு விட்டு கனமழையானது அவ்வப்போது பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல், ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தம் வரை இரவு வானம் ஓரளவிற்கு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை மழை எச்சரிக்கை - TN Weather Forecast Today
தமிழகத்தில் இன்று (16-12-2025) காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை எச்சரிக்கையானது, காலை 10 மணி வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.