ஐ.சி.எஃப் போலீஸ் மீது கொலை வழக்கு:


2012 ஆம் ஆண்டு விசாரணை கைதி நித்தியராஜ்  மரண வழக்கில், ஐ.சி.எஃப் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது .


வழக்கு:


கடந்த 2012 ஆம் ஆண்டு காவல்துறை நண்பனாக இருந்த நித்தியராஜ், பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புழல்  சிறையில் அடைக்கப்பட்ட நித்தியராஜ் 5வது நாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ராயப்பேட்டை மருத்துவமனை செல்லும் வழியில் மரணமடைந்தார்.


உயர்நீதிமன்றம் உத்தரவு:


இந்நிலையில், காவல்துறையின் தாக்குதலால் தான், தனது மகன் உயிரிழந்ததாக, சிபிஐ விசாரணை கோரி அவரது தாய் பூங்குழலி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிபிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நித்தியராஜின் தாய், உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தாக்குதலால்தான் விசாரணை கைதி உயிரிழந்துள்ளார் என தெரிகிறது என்றும், விசாரணை கைதி மரண வழக்கில் அயனாவரம் ஐ.சி.எஃப் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்தியராஜின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க, தமிழ்நாடு அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Also Read: காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்லாண்டிபாளையத்தை சார்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியை என்பதும் மேலும் பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண