திருவண்ணாமலை (Tiruvannamalai News): இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கினார். சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் படப்பிடிப்பு முடிந்தவுடன் காரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் வெளியில் தன்னை காண வந்த ரசிகர்களை காரில் இருந்து கை அசைத்த வாறு சென்றார். இதனால் அங்கு இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  ரஜினிகாந்த் அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் ரஜினிகாந்த் வருவார் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் காலை, மாலை என இரு வேளையும் இதோ வருகிறார், அதோ வருகிறார் என சொல்லி எதிர்பார்த்து இருந்தனர்.


 


 


 




சூப்பர் ஸ்டார் ரஜினி தனிமனிதராக சாமி தரிசனம் (Sami darshanam as superstar Rajini individual)


இந்த நிலையில் இன்று காலை திடீரென எந்த ஆரவாரமும் இல்லாமல் தனி மனிதராக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது விநாயகர் மற்றும் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்யும் வரை ரஜினிகாந்தை பக்தர்கள் அடையாளம் காணவில்லை. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அடையாளம் கண்டு செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்கு ஒரே இடத்தில் திரண்டதால் ரஜினிகாந்த் அம்மன் சன்னதியில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமமாக இருந்தது. கோயில் ஊழியர்கள் மற்றும் ரஜினிகாந்தின் பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வெளியே அழைத்து வந்தனர்.


 




 


ரஜினி ரசிகர்கள் வேதனை 


ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவது அவரின் ரசிகர் மன்றத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது. ரஜினிகாந்த் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து சென்ற பின்பு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் கோயிலுக்கு வந்து ரஜினிகாந்த் தரிசனம் செய்துவிட்டு சென்றுவிட்டார் என்ற தகவலை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருவண்ணாமலையில் உள்ள ரஜினி ரசிகர்கள் ரசிகர் மன்றத்தின் மூலம் போட்டோ சூட் எடுப்பதற்கு அனுமதிப்பார் என்ற ஆவலோடு காத்திருக்கின்ற நிலையில் மன்ற நிர்வாகிகளுக்கு கூட தெரியாமல் தனி மனிதராக வந்து சென்றது ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏமாற்றத்தை அளித்திருப்பதாக ரசிகர்கள் புலம்புகின்றனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.