சுரங்கத்துறை, தொழில்துறைக்கு புதிய ஆணையர்:


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை  செயலாளராக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ், தொழில் மற்றும் வர்த்தகத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நிறுவனம் செய்யப்பட்டுள்ளார். ஹர் சஹாய் மீனா ஐ.ஏ.எஸ், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:


சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.


சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.


சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சிவக்குமார் ஐ.பி.எஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுஜித்குமார், மதுரை அமலாக்க பிரிவின் எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.


திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டார். சேலம் நகர துணை காவல் ஆணையராக இருந்த லாவண்யா, சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியின் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். மதுரை நகர (வடக்கு) துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்த், சிவகங்கை மாவட்ட காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.


தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஜி ஆர்.சுதாகர் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


அதேபோன்று, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் , சென்னை காவல்துறை தலைமையக  ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார்.


இதையும் படிக்க: AIADMK-BJP: தீர்மானம் போட்டு தீர்த்து கட்டிய இ.பி.எஸ்.. பா.ஜ.க. கூட்டணிக்கு டாடா காட்டிய அதிமுக!