வெத்து வாக்குறுதிகளைப் பார்த்து வெகுண்டெழ எனக்கு நேரமில்லை; நான் காலநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயங்க விரும்புகிறேன் என உலகத் தலைவர்கள் மத்தியில் இந்திய மாணவி ஒருவர் பேசியுள்ளார்.


அந்தப் பேச்சின் சாராம்சத்தை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள சுப்ரியா சாஹூ ஐஏஎஸ், இவர் வினிஷா உமாஷங்கர். 15 வயது நிரம்பிய இவர் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். COP26 மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றத் தகுதி பெற்ற இறுதிப் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்று பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அவர் டேக் செய்துள்ளார். EarthshotPrize என்ற அமைப்பின் சார்பில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பான போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் தான் வினிஷா உமாஷங்கர் இவ்வாறு பேசியுள்ளார். 


அவர் பேசியாதவது:


"இங்கே பேசிய என்னைப் போன்ற இளம் செயற்பாட்டாளர்கள் பலரும் உலகத் தலைவர்களின் வெற்று வாக்குறுதிகளைக் கண்டு கோபம் கொல்வதாகத் தெரிவித்தனர். ஆம் கோபப் பட எங்கள் அனைவருக்கும் தகுதி இருக்கிறது. ஆனால், வெத்து வாக்குறுதிகளைப் பார்த்து வெகுண்டெழ எனக்கு நேரமில்லை. நான் காலநிலை மாற்றத்துக்கு எதிராக செயல்பட விரும்புகிறேன். ஏனெனில் நான் இந்தியாவை மட்டுமே சார்ந்தவர் அல்ல. நான் இந்த பூமியின் பிரதிநிதி. அதில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பிரிட்டனின் க்ளாஸ்கோ நகரில் நடக்கவிருந்த மாநாடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவில்லை. அந்த மாநாடு இந்த ஆண்டு நடந்தது. 


க்ளாஸ்கோவில் நடந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக அளவில் காலநிலை மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் கார்பன் வெளியேற்றத்தின் நிலவரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.






உலக அளவில் கார்பன் வெளியேற்றத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும் உள்ளன. 


அமெரிக்கா ஆண்டுக்கு 18.6 டன் கார்பனை வெளியேற்றுகிறது. சீனா ஆண்டுகு 8.4 டன் கார்பனை வெளியேற்றுகிறது. மூன்றாவது இடத்தில் உள்ளா இந்தியா 1.96 டன் கார்பனை வெளியேற்றுகிறது.


காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பருவம் தவறிய மழை, பொய்த்துப் போன மழை, புயல், வறட்சி என மிகக் கொடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.


இந்நிலையில், க்ளாஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரை இந்தியா மட்டும் தான் அளித்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றிவரும் நாடாக இருக்கிறது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில்" என்று தெரிவித்தார்.