கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. அந்த வழியில் செல்பவர்கள் தங்கள் கண்களில் தென்படும் வனவிலங்குகளை புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது வழக்கம்.
அந்தவகையில், சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் கவர்க்கல் என்னும் இடத்தில் சுமார் 6 வயதுடைய புலி கம்பீரமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் தாவி சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீப வைரல். அதனை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீடியோ குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்மோகன் என்ற புகைப்பட கலைஞரும் அவரது மனைவியும் வால்பாறை சாலையில் செல்லும்போது இருவரும் இணைந்து அந்த வீடியோவை எடுத்திருக்கின்றர்.
இதுகுறித்து ராஜ்மோகனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தேயிலை எஸ்டேட் ஒன்றில் நல்ல சூரிய உதயக் காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாலையில் எழுந்தோம். ஆனால் வானிலை எங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதை கொடுத்தது. ஏமாற்றத்துடன், யானைகள், சிங்கவால் மக்காக்குகள், மலபார் ராட்சத அணில்கள், மயில்கள் மற்றும் பல விலங்குகளைக் கொண்ட இந்த இடத்தில் 3 நாள்கள் இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.
பல நினைவுகளைச் சுமந்துகொண்டு, நாம் முடித்துவிட்டோம் என்று நினைத்தேன் ராஜை ஓட்ட விட்டுவிட்டுச் சென்றேன். ஆனால் எங்கள் அதிர்ஷ்டத்திற்கு, காலை 8:30 மணியளவில் புலி ஒன்று சாலையை கடந்தது. அதனை ராஜ் கண்டார்ர். அதனைக் கண்ட அவர் உற்சாகத்தில் கத்தினார்.
எங்கள் காரில் இருந்து 10 மீட்டர் தொலைவில் புலி இருந்தது! அவ்வளவு கம்பீரமும், ராஜாங்கமும்!! நான் வீடியோ எடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் நடுங்கத் தொடங்கினேன். ஆனால் புலி தன்னை படம்பிடிக்க எனக்கு போதுமான நேரத்தைக் கொடுத்து மெதுவாக நடந்தது. அவ்வளவுதான்! அதன் பிறகு அவர் நம் பார்வையில் இருந்து மறைந்தார். என்ன ஒரு சிலிர்ப்பான தருணம் இது! நீங்கள் தினமும் பார்க்க முடியாத அபூர்வ காட்சியாக இது நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்