கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
நடிகரின் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருப்பவர். தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்களை பதிவிட்டும், சைக்கிளிங் வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிறகும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். 2022 எனக்காக என்னென்ன வைத்திருக்கிறாய் என்று பார்க்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.