சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று  உத்தரவிட்டுள்ளார்.


அதிரடிக்கு மேல் அதிரடி:


நாகை மாவட்ட ஆட்சியராக உள்ள அருண் தம்புராஜ் ஐஏஎஸ், கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை செயலாளராக உள்ள அன்னே மேரி ஸ்வர்னா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக உள்ள தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரிகள் துறை இணை செயலாளராக உள்ள மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



கணவன் மற்றும் மனைவி ஆட்சியர்

 

மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள விஷ்ணு சந்திரன் தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார். வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இப்பொழுது இவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். 2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் சர்வீஸ் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்றார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகவும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பொறுப்புகளில் இருந்துள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ஆஷா அஜித் தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தம்பதியரான விஷ்ணு சந்திரன்-ஆஷா அஜித் ஆகிய இருவரும் அடுத்தடுத்த மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது