தமிழ்நாடு மின்சார கட்டணத்தை செலுத்த எளிதான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு மின்சார வலைதளம் மூலம் எளிதாக மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சார கட்டணம் செலுத்த நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.இதன் தொடர்ச்சியாக தற்போது மொபைல் போன் மூலம் கூகுள் பே வழியாக மின்சார கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் தொடங்கியது. 


இந்நிலையில் கூகுள் பே மூலம் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அதன்படி கூகுள் பே மூலம் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்த முடியும் தெரியுமா?



  • முதலில் நம்முடைய மொபைல் போன் மூலம் கூகுள் பே செயலியில் பில்ஸ் என்று வரும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். 

  • அதன்பின்னர் வரும் திரையில் மின்சாரம் என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். 

  • அடுத்து வரும் திரையில் தமிழ்நாடு மின்சார வாரியம் (டிஎன்.இ.பி) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 

  • அதைத் தொடர்ந்து வரும் திரையில் Get started என்பதை க்ளிக் செய்ய வேண்டும். 

  • அப்போது வரும் திரையில் உங்களுடைய மின் நுகர்வோர் எண் மற்றும் மண்டல எண் ஆகியவற்றை பதிவு செய்து விட்டு உங்கள் கணக்கை இணைக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். 

  • அதன்பின்னர் உங்களுடைய நுகர்வோர் எண் மற்றும் பெயர் திரையில் வரும். அதை சரிப்பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் கணக்கை இணைக்கும் விருபத்தை தேர்வு செய்ய வேண்டும். 

  • உங்களுடைய கணக்கு இணைக்கப்பட்ட உடன் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் அதற்கான கடைசி நாள் ஆகியவை கூகுள் பே செயலியில் வரும். அங்கு உள்ள பே பில் என்ற விருப்பத்தை தேர்வு செய்து நீங்கள் எளிதாக மின் கட்டணத்தை செலுத்த முடியும். 






இதேபோன்று ஒரே மொபைல் போனிலுள்ள கூகுள் பே செயலியில் பல மின் நுகர்வோர் எண்ணை இணைத்து அதற்கும் எளிதாக மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ’எதுக்கு டான்ஸ் ஆடுன?’ : கன்னத்தில் அறைந்த மணமகன்.. வேறு மாப்பிள்ளையை செலக்ட் செய்த மணமகள்.. பண்ருட்டியில் ஒரு சூப்பர் கல்யாணம்..