கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகளுடன் வரும் ஜூன் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை கொரோனா பரவல் வாரியாக மூன்றாக பிரித்து அதற்கு ஏற்றார்போல் தனித்தனி தளர்வுகளை பிறப்பித்துள்ளது.



11 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை 


திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வகை-1 என்ற பட்டியில் உள்ள 11 மாவட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதன்படி 



  1. கோயம்புத்தூர்

  2. நீலகிரி

  3. திருப்பூர்

  4. ஈரோடு

  5. சேலம்

  6. கரூர்

  7. நாமக்கல்

  8. தஞ்சாவூர்

  9. திருவாரூர்

  10. நாகப்பட்டினம்

  11. மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக இ-பாஸ்கள் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது 


27 மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி


வகை-2 பட்டியலில் இருக்கும் 23 மாவட்டங்கள் மற்றும் வகை-3 பட்டியலில் உள்ள 4 மாவட்டங்கள் என 27 மாவட்டங்களில் மட்டும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான இ-பதிவு நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது, இதன்படி 



  1. அரியலூர்

  2. கடலூர்

  3. தருமபுரி

  4. திண்டுக்கல்

  5. கள்ளக்குறிச்சி

  6. கன்னியாகுமரி

  7. கிருஷ்ணகிரி

  8. மதுரை

  9. பெரம்பலூர்

  10. புதுக்கோட்டை

  11. இராமநாதபுரம்

  12. இராணிப்பேட்டை

  13. சிவகங்கை

  14. தேனி

  15. தென்காசி

  16. திருநெல்வேலி

  17.  திருப்பத்தூர்

  18. திருவண்ணாமலை

  19. தூத்துக்குடி

  20. திருச்சிராப்பள்ளி

  21. விழுப்புரம்

  22. வேலூர்

  23. விருதுநகர்

  24. சென்னை

  25. திருவள்ளூர்

  26. காஞ்சிபுரம்

  27. செங்கல்பட்டு  


ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று பயணிக்க முடியும் எனவும் வகை-1இல் பட்டியலிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் இ-பாஸ் பெற்று இந்த மாவட்டங்களுக்கு பயணிக்க முடியாது எனவும் தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இ-பாஸ் பெறுவது எப்படி?



இதன்படி வகை-2 மற்றும் வகை-3 பிரிவுகளில் உள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணைய வழியாக https://eregister.tnega.org – என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் எனவும், திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சுற்றுலா தளங்களுக்கான இ-பாஸ்


மேலும் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது