AK Rajan Committee NEET Report: தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர்.


இந்த அறிக்கையில் 2010-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:


நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரி :


2010- 2011 :


                     ஆங்கில வழி மாணவர்கள் - 55.64 சதவீதம்


                      தமிழ் வழி மாணவர்கள் - 16.26 சதவீதம்


2011-2012 :


                       ஆங்கில வழி மாணவர்கள் – 53.64 சதவீதம்


                        தமிழ் வழி மாணவர்கள்     - 13.33 சதவீதம்


2012-2013


                        ஆங்கில வழி மாணவர்கள்  - 54.56 சதவீதம்


                          தமிழ் வழி மாணவர்கள்     - 14.48 சதவீதம்


2013- 2014


                        ஆங்கில வழி மாணவர்கள்  - 55.19 சதவீதம்


                         தமிழ் வழி மாணவர்கள்        - 14.42 சதவீதம்


2014-2015


                         ஆங்கில வழி மாணவர்கள்   - 56.15 சதவீதம்


                          தமிழ்வழி மாணவர்கள்         - 15.28 சதவீதம்


2015-2016


                           ஆங்கில வழி மாணவர்கள்  - 62.39 சதவீதம்


                            தமிழ்வழி மாணவர்கள்        - 15.15 சதவீதம்


2016-2017


                           ஆங்கில வழி மாணவர்கள் – 54.55 சதவீதம்


                            தமிழ் வழி மாணவர்கள்      - 12.14 சதவீதம்


நீட் தேர்வுக்கு பின்பு அரசு மருத்துவ கல்லூரிகள் :


தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:


2017 – 2018 :


                      ஆங்கில வழி மாணவர்கள் – 74.24 சதவீதம்


                       தமிழ்வழி மாணவர்கள்       - 1.17 சதவீதம்


2018-2019


                        ஆங்கில வழி மாணவர்கள் – 67.54 சதவீதம்


                         தமிழ்வழி மாணவர்கள்        - 2.42 சதவீதம்


2019-2020


                        ஆங்கில வழி மாணவர்கள் – 66.8 சதவீதம்


                        தமிழ்வழி மாணவர்கள்        -  1.38 சதவீதம்


2020 -2021:


                          ஆங்கில வழி மாணவர்கள் – 69.53 சதவீதம்


                           தமிழ்வழி மாணவர்கள்        - 1.7 சதவீதம்


நீட் தேர்வுக்கு முன்பு சுயநிதி மருத்துவ கல்லூரி :


அதேபோல, நீட் தேர்வுக்கு முன்பு சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விகிதத்தை கீழே காணலாம்.


2010-2011 :


                       ஆங்கில வழி மாணவர்கள் – 24.56 சதவீதம்


                        தமிழ்வழி மாணவர்கள்    - 3.53 சதவீதம்


2011-2012 :


                        ஆங்கில வழி மாணவர்கள் – 28.31 சதவீதம்


                         தமிழ்வழி மாணவர்கள்         -  4.72 சதவீதம்


2012 – 2013 :


                          ஆங்கில வழி மாணவர்கள் – 26.86 சதவீதம்


                            தமிழ்வழி மாணவர்கள்      - 4.1 சதவீதம்


 


2013 -2014 :


                       ஆங்கில வழி மாணவர்கள் – 27.36 சதவீதம்


                        தமிழ்வழி மாணவர்கள்       - 3.03 சதவீதம்


2014-2015 :


                         ஆங்கில வழி மாணவர்கள்  - 24.72 சதவீதம்


                         தமிழ்வழி மாணவர்கள்        - 3.84 சதவீதம்


2015-2016 :


                             ஆங்கில வழி மாணவர்கள் – 20.66 சதவீதம்


                               தமிழ்வழி மாணவர்கள்      - 1.79 சதவீதம்


2016-2017 :


                            ஆங்கில வழி மாணவர்கள் – 30.57 சதவீதம்


                             தமிழ்வழி மாணவர்கள் – 2.74 சதவீதம்


நீட் தேர்வுக்கு பின்பு சுயநிதி மருத்துவ கல்லூரி : 


நீட் தேர்வுக்கு பின்பு சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விகிதத்தை கீழே காணலாம்.


2017 – 2018 :


                       ஆங்கில வழி மாணவர்கள் – 24.17 சதவீதம்


                        தமிழ்வழி மாணவர்கள்        - 0.43 சதவீதம்


2018-2019 :


                         ஆங்கில வழி மாணவர்கள்   - 29.19 சதவீதம்


                          தமிழ்வழி மாணவர்கள்         - 0.85 சதவீதம்


2019-2020 :


                          ஆங்கில வழி மாணவர்கள் – 31.51 சதவீதம்


                              தமிழ்வழி மாணவர்கள்    - 0.31 சதவீதம்


2020-2021 :


                              ஆங்கில வழி மாணவர்கள் – 28.48 சதவீதம்


                              தமிழ்வழி மாணவர்கள்       - 0.29 சதவீதம்


இந்த புள்ளி விவரங்கள் தமிழ்வழியில் படித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு பின்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை விளக்கமாக எடுத்துக்காட்டியுள்ளதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.