பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கோபிசந்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி அளித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கணக்கில் வாகனங்கள் சாலையிலே காத்துக்கிடக்கின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கலைப்பதற்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருவதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி வருகின்றனர். எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த பின்பும் இன்னும் போராட்டம் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 15 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன.