ஆசனூரில் காரை வழிமறித்து அடித்து நொறுக்கிய யானைகள். ஆசனூர் தாளவாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சுற்றி தாளவாடி, திம்பம், ஆசனூர், பவானி சாகர் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலத்தில் உள்ள வனப்பகுதி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு என அனைத்தையும் இணைக்கும் தாளவாடி சத்தியமங்கல தேசிய நெடுஞ்சாலை. அடர்ந்த வனத்திற்குள் சாலை செல்வதால் அவ்வப்போது வன விலங்குகள் சாலையில் நடமாடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்த மூன்று யானைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு காரினை துரத்திய மூன்று யானைகளும் அதனை உலுக்கி, காரின் மிரரை உடைத்து பறக்கவிட்டன. காருக்குள் இருந்தவர்களில் உயிருக்கு பயந்து ஒருவர் இறங்கி ஓடிவர, காருக்குள் இருந்த மற்றவர்கள் காரை வேகமாக இயக்கி யானையின் பாதையில் இருந்து விலகிச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே சாலையில் சில தினங்களுக்கு முன் கரும்பு லாரியை வழிமறித்த யானை ஒன்று கரும்புகளை ஆசை தீர சாப்பிட்ட பின்னர் லாரிக்கு வழிவிட்டது. இதனாலும் போக்குவரத்து பாதிப்பு மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்