பாஜக பூத் கமித்டி மாநாட்டில் பங்கேற்க நெல்லை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித் ஷாவிற்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
பின்னர், நயினார் நாகேந்திரன் வீட்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் கறித்து ஆலோசனையில் ஈடுபட்டார் அமித் ஷா. இந்த ஆலோசனையில், எல். முருகன், அண்ணாமலை, தமிழசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து முடிந்ததும், பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்றுள்ளார் அமித் ஷா. தச்சநல்லூரில் நடைபெறும் மாநாட்டில், 8,000-த்திற்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அமித் ஷா வருகையை ஒட்டி, நெல்லையில் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.