தமிழ்நாட்டில் இன்று (22-11-2025) மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டில் நல்ல மழை பொழிவுக்கு காரணமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் என்று பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல், தென் கிழக்கு கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணி வரை கனமழை எச்சரிக்கை
இன்று (22-11-2025) மதியம் ஒரு மணி வரை கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான கன மழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு, சென்னை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரைக்காலிலும் மதியம் 1 மணி வரை மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.