தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையே அதிரடியாக தொடங்கியது. அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியது. இதில் மோன்தா புயல் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்த்து. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று 12 மாவட்டங்களுக்கும் நாளை 6 மாவட்டங்களுக்கும் கன மழைக்கான வானிலை மையல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Continues below advertisement

இன்று (06-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம்,  கள்ளக்குறிச்சி,  பெரம்பலூர்,  அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

6 மாவட்டங்களில் கன மழை

நாளை (07-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (08-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

Continues below advertisement

வருகிற 09ஆம் தேதிமுதல் 12ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை  வானிலை நிலவரம்

இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை  33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.