தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Continues below advertisement

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக தேனி,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Continues below advertisement

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.10ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.11 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில்  இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இந்த நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை தமிழ்நாட்டில் சராசரியாக 227 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது சராசரி மழை இயல்பைவிட மூன்று சதவீதம் குறைவாகும். ஆனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அதிக அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

கோயம்புத்தூரில் 47%, மயிலாடுதுறையில் 44%, நீலகிரியில் 21%, ராணிப்பேட்டையில் 32%, தென்காசியில் 77%, தேனியில் 25%, திருநெல்வேலியில் 31%, திருவள்ளூரில் 35%, வேலூரில் 17 சதவீதமும் மழை இயல்பை விட கூடுதலாக பெய்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு சில மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பதிவாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீதமும், தூத்துக்குடியில் 77%, திருச்சியில் 44%, திருப்பூரில் 62%, சேலத்தில் 21%, ராமநாதபுரத்தில் 39%, நாமக்கல் மாவட்டத்தில் 37%, நாகப்பட்டினத்தில் 33%, மதுரையில் 34%, கிருஷ்ணகிரியில் 29%, கரூரில் 57%, கன்னியாகுமரியில் 15%, காஞ்சிபுரத்தில் 10%, கள்ளக்குறிச்சியில் 32%, ஈரோட்டில் 31%, திண்டுக்கல்லில் 60%, தர்மபுரியில் 30%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 சதவீதமும் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.