வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில்  நகர்ந்து,  நேற்று (17-11-2023)  பிற்பகல் 1430 – 1530 மணி அளவில் வங்கதேசம்  கடற்கரை அருகில் கேப்புபாராவில்  கரையை கடந்தது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  இலங்கை பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


18.11.2023: வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


19.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


20.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


21.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


23.11.2023 மற்றும் 24.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


மணல்மேடு (மயிலாடுதுறை), நன்னிலம் (திருவாரூர்) தலா 7, நீடாமங்கலம் (திருவாரூர்) 5, காரைக்கால்  4, மஞ்சளாறு (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பாண்டவையர் தலைமை (திருவாரூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர் (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 3, கீழ்  அணைக்கட்டு (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தரங்கம்பாடி (மயிலம்பாடி) , பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தக்கலை (கன்னியாகுமரி),  மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.