TN Weather Update: தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. எந்தெந்த பகுதிகளில் கனமழை இருக்கும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காற்றின் திசை மாறுபாடு மற்றும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Continues below advertisement

நாளை  தமிழகத்தில்  அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அதேபோல், வெப்ப அலையும் குறைந்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பதிவாகி வருகிறது.

இந்நிலையில் இன்று, தென் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே சமயம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement