விழுப்புரம்: திண்டிவனம் அருகே குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி சென்னை வாலிபரிடம் ரூ. 35 லட்சம் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 8 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் மூன்று பேரை ரோஷனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறைந்த விலையில் தங்கம் - நம்பி ஏமாந்து போன வாலிபர்
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பால கோவிந்ததாஸ் மகன் ஹிதேஷ்பிஷா (44), தனியார் கல்லுாரியில் நிர்வாக உதவியாளரான இவருக்கு, முகநூல் மூலம் பழக்கமான ராஜராஜன் என்பவர், தனக்கு கஸ்டம்ஸ். அலுவல்கத்தில் பழக்கம் உள்ளதால், 10 முதல் 15 சதவீதம் விலை குறைவாக தங்கம் வாங்கலாம் எனக் கூறியுள்ளார். அதனை நம்பிய ஹிதேஷ் பிஷா குறைந்த விலையில் தங்கம் வாங்க, ராஜராஜன் கூறியபடி கடந்த 3ம் தேதி தனது காரில் டிரைவரு டன் திண்டிவனம் வந்தார் திண்டிவனத்தில் ராஜ ராஜனை ஏற்றிக்கொண்டு, தீவனுார் கூட்டேரிப்பட்டு சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 7 பேர், ஹிதேஷ் - பிஷா காரை மறித்து நாங்கள் போலீசார், காரை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி ஹிதேஷ் பிஷா மற்றும் டிரைவர் ஆனந்தனை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு ராஜராஜன் உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து ஹிதேஷ்பிஷாவை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.35 லட்சம் ரொக்க பணம், 2 சவரன் தங்க செயின், இரு மொபைல் போன்களை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஹிதேஷ் பிஷா அளித்த புகாரின் பேரில், ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜன் உட்பட 10 பேரை தேடி வந்தனர். இதே பாணியில் செஞ்சி அருகே பணத்தை கொள்ளை அடிக்க எட்டு பேரை சத்தியமங்கலம் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்த நிலையில் அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படை யில் தீவனூர் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பன்னீர்செல்வம் 44, செல்வகுமார் 30, ஜான் கென்னடி 36 பரத் 27 ஆகிய நான்கு பேரையும் ரோஷனை போலீசார் கைது செய்தனர்.