நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சுதந்திர தினத்திற்காக பிரதமர் மோடி டெல்லியிலும், அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அவர்களது மாநில தலைநகரிலும் தேசிய கொடியேற்ற உள்ளனர்.
இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பாரம்பரிய சின்னங்கள், பழமையான கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்திற்கு கீழே காணும் வாழ்த்துகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
உதிரம் சிந்திஇந்தியாவை உயரப் பறக்க வைத்த பார் போற்றும் சுதந்திர தியாகிகளை போற்றுவோம்..
பட்டொளி வீசி பறக்குதுஎன் பாரதத்தின் வீரக்கொடி...உலகமே வியந்து பார்க்க நிமிர்ந்து நிற்குது எங்கள் செங்கொடி...
நிறம் பிரித்தாலும்..மதம் பிரித்தாலும்..மொழி பிரித்தாலும்...இனம் பிரித்தாலும்...நாங்கள் இந்திய அன்னையின் பிள்ளைகள்...
எத்தனை எத்தனை கண்ணீர்..எத்தனை எத்தனை அவலம்..எத்தனை எத்தனை வலிகள்..எத்தனை எத்தனை பழிகள்...எத்தனை எத்தனை போராட்டங்கள்..அத்தனையும் கடந்து சிரித்தோம்..பாரத அன்னை கைவிலங்கு கட்டவிழ்ந்தபோது...
மன்னர் என்றார்..பண்ணை என்றார்..ஜமீன்தார் என்றார்..ஏகாதிபத்தியம் என்றார்..அத்தனையும் உடைத்துஆகஸ்ட் 15ல் அனைவரும் சமம் என்போம்...
அடிமைச் சங்கிலியை உடைத்தோம்..ஆங்கில விலங்கை வதைத்தோம்..புது சரித்திரம் படைத்தோம்..பாரத அன்னையை சுதந்திரத்தால் வளர்த்தோம்..
சொல்ல முடியாத வலிகள்..கடக்கவே முடியாத வழிகள்...செய்யாத தவறுக்கு சுமந்த வீண்பழிகள்...துரோகத்தால் பறிக்கப்பட்ட குழிகள்...பல சோகங்களுக்கும், தியாங்களுக்கும்பிறகு தணிந்தது எங்கள் சுதந்திர தியாகம்...
காற்றிற்கே கம்பீரம் சேர்க்குது..காலத்தை வென்ற எங்கள் தேசிய கொடி...புன்னகையை பூக்களாய் உதிருது..பாரதம் போற்றும் பாரதி புகழ்ந்த கொடி...கைகளில் ஏந்தினாலேபுது சக்தி தருது நாங்கள் நெஞ்சில் ஏந்தும் மூவர்ணகொடி...
நேதாஜியின் வீரமும்...காந்தியின் அகிம்சையும்..எண்ணிலடங்கா தியாகிகளின் தியாகங்களும்...விண்ணதிர சொல்லும்இந்த மண்ணின் சுதந்திர பெருமையை...!
அன்னை என்றாலும்..அன்னை மண் என்றாலும்முதல் கண்ணீர் சிந்துவது தமிழனே...இந்த மண்ணை காக்கஇன்னுயிர் தந்து காத்ததும் தமிழனே..
பாரதி என்பேனா..வஉசி என்பேனா..திருப்பூர் குமரன் என்பேனா...வாஞ்சிநாதன் என்பேனா..சுப்பிரமணிய சிவா என்பேனா..எத்தனை எத்தனை உதிரங்கள்...இந்த மண்ணின் அடிமைச் சிறகுகள் விரிந்து பறக்க...தங்கள் உயிர் தந்த மாமனிதங்கள்..!
சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலே கண்ட வாழ்த்துகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது.