ஆளுநர் தமிழிசை புத்தாண்டு வாழ்த்து...


தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும், ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவரும் மகிழ்ச்சியோடு, பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.


முதல்வர் ரங்கசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து...


புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிறக்கும் இந்த சோபக்கிறது ஆண்டானது ஒரு மங்களகரமான புத்தாண்டாகும் மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும்போது இந்த மங்களகரமான ஆண்டானது உங்கள் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் அளிக்கும் ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த சோபக்கிறது தமிழ் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் புதிய வெளிச்சத்தையும், வளமான எதிர்காலத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று கூறி அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.


உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து...


உலகன்‌ மூத்தகுடி எனும்‌ பெருமை கொண்ட தமிழ்‌ குடிமக்கள்‌ தொன்மையிலும்‌ பன்முகத்தன்மையிலும்‌ ஈடு இணையில்லா பண்பாட்டு பெருமை கொண்ட தமிழ்‌ மக்கள்‌ கொண்டாடி வரும்‌ சித்திரை  முதல்‌ நாளாம்‌ தமிழ்‌ புத்தாண்டில்‌ அனைவர்‌ வாழ்விலும்‌ நலமும்‌ வளமும் பெருகிட வாழ்த்தி எனது மனமார்ந்த தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்‌. கொரோனா தொற்று மீண்டும்‌ அதிகரித்து வரும்‌ இந்த காலகட்டத்தில்‌ அதற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து முககவசம்‌ அணிய வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்‌. உலகெமெங்கும்‌ வாழும்‌ தமிழ்‌ சொந்தங்களுக்கு இந்த தமிழ்‌ புது வருடப்‌ பிறப்பு சிறப்பானதொரு வாழ்க்கையை அருள வேண்டுகிறேன்‌. மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ பல்வேறு வளர்ச்சித்‌ திட்டங்களையும்‌, நலத்திட்டங்களையும்‌ மக்கள்‌ அனைவரும்‌ முறையாக பயன்படுத்தி தங்கள்‌ வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்வதுடன்‌, வலிமை மிக்க மாநிலமாக புதுச்சேரி படைத்திட வேண்டும்‌ என்று அனைவரையும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த தமிழ்‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


முன்னாள் முதல்வர் நாராயணசாமி  தமிழ் புத்தாண்டு வாழ்த்து...


உலகம் முழுவதும் தமிழர்கள் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் குதுகலத்துடனும் உற்றார் உறவினர்கள் உடன் இணைந்து கொண்டாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தமிழ் புத்தாண்டு அன்று அவர்கள் புத்தாடை உடுத்தி கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கி இந்த ஆண்டு தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பொங்குகின்ற ஆண்டாக இருக்க வேண்டும் அவர்களை சூழ்ந்துள்ள பகைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்று இறைவனை வேண்டி தங்களுடைய மனதில் உள்ள சுமையை இறைவனிடம் இறக்கிவைப்பார்கள். புதுச்சேரி தமிழகம் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் தமிழ் புத்தாண்டை மிகவும் விமர்சையாக கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. நம் நாட்டில் இது போன்ற புத்தாண்டு நிகழ்ச்சிகள் தீபாவளி பொங்கல் நவராத்திரி சிவராத்திரி ராமநவமி போன்ற மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடுவதும் தமிழர் பாரம்பரியத்தை பேணி காக்கும் என்ற மிகப்பெரிய கவசமாக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இருக்கும் சிலர் இந்திய சரித்திரத்தை மறைத்து தமிழர் பாரம்பரியத்தை திரித்து தமிழர்களுடைய பெருமையை கொச்சைப்படுத்தும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார்கள் அது மிகவும் வேதனைக்குரியது புத்தாண்டு என்றால் ஆங்கில புத்தாண்டு என்கிறார்கள் சித்திரை திருநாள் தான் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு. இதை அவர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இனிய நாளில் தமிழகம் புதுச்சேரி மற்றும் பல மாநிலங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் வசிக்கும் நம்முடைய தமிழ் வழி மக்கள் 2023 சித்திரை திருநாளை மிக சிறப்பாக கொண்டாடி தமிழ் பாரம்பரியத்தை காக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.


புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து...


தமிழ் புத்தாண்டு கொண்டாடும் புதுச்சேரி மாநில அனைத்து தமிழ் மக்களுக்கும் அதிமுக சார்பில் இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாளை பிறக்கும் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முழுவதும் மகிழ்வான ஆண்டாக அனைவருக்கும் அமைய தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொரு மனிதனின் உயிரோடு கலந்தது அவரவர் தாய் மொழியாகும்.அந்த தாய் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக சித்திரை மாதம் முதல் தேதி தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு நாளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு என்பது தமிழர்களின் சரித்திர வரலாற்று நாளாகும். அந்த சரித்திர வரலாற்று நாளையே தனது அதிகார கணத்தில் அப்பொழுது ஆட்சியில் இருந்த தமிழக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினர் மாற்றம் செய்தனர். தமிழ் புத்தாண்டை மூடி மறைக்கும் உள்நோக்கத்தோடு மாற்றம் செய்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சதி செயலை தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீக்கம் செய்து தமிழ் மக்களின் எண்ணத்தை நிறைவேற்றினார். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து குடும்பத்தாரின் இல்லங்களிலும் உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்க இந்நன்னாள் என்றும் சிறப்படைய எனது அன்பான வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதுச்சேரி அதிமுக மாநில துணை செயலாளர், திரு.வையாபுரி மணிகண்டன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து...


சித்திரை முதல்நாளான தமிழ் புத்தாண்டு மலரும் பொன்னாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், புதுச்சேரி மாநில மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கும் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய புத்தாண்டு தமிழ் மக்கள் அனைவரது வாழ்விலும் வளம் சேர்க்கட்டும், மகிழ்ச்சியை பெருக்கட்டும், வாழ்வு செழிக்கட்டும். புதுச்சேரி மாநிலத்தில் மது போதையால் எதிர்கால சந்ததிகள் சீரழிந்தது போதும். போதை கும்பல் அட்டூழியத்தால் உயிர் பலிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த தமிழ் புத்தாண்டு போதை இல்லாத ஆண்டாக அமைய அனைவரும் சபதமேற்போம். தாய்மார்களின் துணையோடு, மது போதைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வெற்றி பெறுவோம். ஆரோக்கியமான, அமைதியான, வளமான, வலிமையான புதுச்சேரியை மீட்டெடுக்க இந்த புத்தாண்டில் இறைவன் அருள்புரியட்டும்  எனக்கூறி அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.