ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை


ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி  மணல்மேடு ஆட்டு சந்தை களைகட்டியது. 75 லட்சம் ரூபாய் மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம்.


 




தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களது கூடுதல் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து விற்பனைக்காக இந்த வாரச் சந்தைக்கு கொண்டு வருவார்கள்.


 




இன்று ஆட்டுச் சந்தையில் செம்மரி ஆடு, வெள்ளாடு, கொடியாடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த வார சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வியாபாரிகள் காலை முதலே தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர்.


 





வாரச் சந்தைக்கு 1000 மேல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஒரு ஆட்டின் விலை சுமார் 7,500 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


காவி உடை, கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் விபூதி பட்டை, குங்குமம் என காவிமயத்தில் திருவள்ளுவர் போஸ்டரை அரவக்குறிச்சி பகுதியில் இந்து முன்னணியினர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வரும் 14ஆம் தேதி சித்திரை 1 தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், மருத்துவமனை, பள்ளப்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அரவக்குறிச்சி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் திருவள்ளுவர் படத்தை காவி உடை, கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் விபூதி பட்டை, குங்குமப் பொட்டு என காவிமயத்தில்  ஒட்டியுள்ளனர். மேலும்,  " நெற்றியில் குங்குமம் நீரு பூசி நிமிர்ந்து நடப்பவன் தமிழன். சித்திரை ஒன்று புத்தாண்டு.  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் " என வாசகங்களுடன் இந்து முன்னணியினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பேப்பர்கள் மூலம் மறைக்கப்பட்ட நிலையில் அதனை மர்ம நபர்கள்  கிழித்துள் ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.