கிரானைட் வழக்கு - சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர துரைதயாநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை

நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என துரை தயாநிதி,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்

Continues below advertisement
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஓலிம்பஸ் கிரானைட் நிறுவனம்,  நாகராஜன்,  துரைதயாநிதி  உள்ளிட்டோர் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில்,  கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மத்திய அமலாக்கதுறை பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து, மதுரை  சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக,  வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடலூரில் ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் உதவியின்றி பிடித்த கிராம மக்கள்

Continues below advertisement

 

 

ஆகவே, நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என துரை தயாநிதி,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன்,  ஜெயசந்திரன் அமர்வு  நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும் . மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து,  விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்"என உத்தரவிட்டனர்.

Watch Audio: ''சசிகலாவை அதிமுகவிற்கு கொண்டுவர வேலை நடக்கிறது''- சர்ச்சை ஆடியோவுக்கு செல்லூர் ராஜூ மறுப்பு

Continues below advertisement
Sponsored Links by Taboola