இசை பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்த வேண்டும். திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மூர்த்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:


திருவாரூர் எனக்கு பிடித்தமான ஊர்; ஆன்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையில் கலந்து கொண்ட நான் இந்த ஊரில் நடக்கும் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவிலும்  பங்கேற்று இருப்பதை பெரும் பேராக கருதுகிறேன்.


யோகக்கலையை பிரதமர் மோடி உலகறிய செய்தார். மனதின் குரல் என்கிற நிகழ்ச்சியின் மூலம் தொலைந்து போன ரேடியோவை மீட்டெடுத்தார். வந்தே பாரத் ரயில் மூலம் ரயில் பயணத்தையும் மீட்டெடுத்துள்ளார். அந்த வகையில் நாம் நமது இசை பாரம்பரியத்தையும் மீட்க வேண்டும். 


இசையைப் பொறுத்தவரை மொழி அரசியலை புகுத்தக் கூடாது.கீர்த்தனைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதன் தன்மைகளை மட்டுமே நாம் உணர வேண்டும். பொதுவாக இசைக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் சொல்கின்றன.


உதாரணமாக குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்கும்போது,அதில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் ஓசை தான் குழந்தைகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.


அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில்  கல்யாணி ராகம் இசைத்தால் விரைவில் நோயாளிகள் குணம் அடைகிறார்கள், சஹானா ராகம் மனச்சோர்வு  நீங்கவும், காச நோயை குணப்படுத்த ஜாய் ஜல வந்தி ராகம், தலைவலியை போக்க சாரங்க தர்பூரி, பசியின்மைக்கு தீபக், பக்கவாதம் குணமாக பைரவி ராகம் இசைக்க வேண்டும் என்பன போன்றவை ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனது பெயரில் மட்டும் தமிழ் இல்லை எனது உயிரிலும் தமிழ் கலந்து இருக்கிறது.


காஞ்சி மகா பெரியவரை பார்க்க நானும் எனது கணவரும் சென்றபோது 50 பேர் இருக்கின்ற கூட்டத்தில் அவர் என்னை அழைத்து கையில் மாங்கனி ஒன்றை கொடுத்தார்.அந்த மாங்கனி தான் என்று இரு மாநில ஆளுநராக எனது கைகளில் பரிணமிக்கிறது என்று கருதுகிறேன்.


இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இசை விழாவில் பங்கேற்கும் பாடகர்களும் ஒவ்வொரு ராகத்திற்கும் என்ன தன்மை உள்ளது என்பதை ஆராய்ச்சியாக மேற்கொண்டு அதனை ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.




மேலும் வாசிக்க..


Sania Mirza - Shoaib Malik : சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் பிரிவு வெறும் வதந்திதானா? மிஸ் யூ சொன்ன ஷோயப்..


Reservation: இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து; தேர்தலுக்கு முதல் நாள் வரை அமல்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி..!