• தமிழகத்தில் நிதிநிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து வரும் ஜூலையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

  • பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகியோரை கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.

  • தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

  • கொரோனா 3வது அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

  • ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் கொண்டுவரப்படும்.

  • தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்த 3 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு.

  • திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்க 50 கோடி ரூபாய், 3வது அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

  • மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலைத் திட்ட பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

  • விடுபட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

  • புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 15 நாளில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும்.

  • மாநில உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பு துணையோடு கடுமையாக எதிர்ப்போம், மாநில அரசின் மூலமாகவே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும்.

  • கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும்.

  • ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு இருக்கும்.

  • மாநிலத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடைய்யின்றி மின்சாரம் வழங்குவதே அரசின் இலக்கு

  • சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுக்கும்.

  • முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 335.01 கோடி நிதி வந்துள்ளது.

  • தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும்.

  • மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும்.

  • ஊழல் தடுப்பு விழிப்பு பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும்.

  • நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன்வடிவை கொண்டு வந்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவோம்.

  • நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

  • தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான சட்டங்கள் இயற்றப்படும்.

  • நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய சட்டமுன்வடிவுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.