நாகா இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக திமுக மூத்த தலைவர், ஆர்.எஸ். பாரதிக்கு ஆளுநர் ஆர். என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், நாகா மக்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். அவர்களை ‘நாய் உண்பவர்கள்’ என்று தி.மு.க.வின் மூத்த தலைவர் திரு ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம் என்று பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்'' என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.






 


தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாக, நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


ஆர்.எஸ். பாரதி பேசியது என்ன?


திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர். எஸ். பாரதி, ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். எத்தனயோ ஆளுநர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டுமென்றே அரசை வம்பு சண்டைக்கு இழுக்கிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். தவறாக நினைக்க வேண்டாம். நான் ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலந்தில் நாய் இறைச்சியை திண்பார்கள். அவர்களுக்கே அந்த அளவிற்கு சொரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு உணவு உண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் உணர வேண்டும்” என பேசியுள்ளார். இந்த பேச்சிற்கு தான் தற்போது ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். 






இந்நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவியின் கண்டனத்துக்கு, ஆர்.எஸ் பாரதி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான பதிவில், ” நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை Gauhati உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 


"அதிமுகவை மிரட்டியதுபோல் திமுகவை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்" : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு


தண்ணீரில் மிதக்கும் காஞ்சிபுரம்.. ஒரு மணிநேரத்தில் இவ்வளவு மழையா? இடி தாக்கி ஒருவர் உயிரிழப்பு..


சமையல் எரிவாயு முன்பதிவில் இந்தி தடங்கல் நீக்கம்.. மகிழ்ச்சி தெரிவித்த எம்.பி சு.வெங்கடேசன்