நடந்துமுடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதிப் பெறும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து இன்று (05/05/2021) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராகத் தான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அளித்தார். 




இதையடுத்து அவரை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா வருகின்ற 7 மே காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஊடக அறிவிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 


 


Also Read: உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - திமுக தலைவர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு..!