மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், 9  பயனாளிகளுக்கு ரூ.3,32,138  இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்டங்களை  வழங்கினார்.


   

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 377 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 49  மனுக்கள் பெறப்பட்டது.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும் (நேற்று), பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 




அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 நபருக்கு தலா ரூ.4999 மதிப்பில் ரூ9,998 மதிப்பீட்டில் கதொலி கருவிகளையும், 2 நபர்க்கு தலா ரூ.7650 மதிப்பில்  ரூ.15300 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ6,840  மதிப்பிலான தையல் இயந்திரமும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டம் திருக்காம்புலீயூரை சேர்ந்த கண்ணன், புவனேஸ்வரி ஆகிய வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  கடவூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.பழனிச்சாமி என்பவருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும்,  மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000  கல்வி வங்கி கடனுக்கான ஆணைகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.2,32,138 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார்.


தொடர்ந்து வேலாயுதபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் பிரசவ காலத்தில் உயிரிழந்தையொட்டி  அவரின் ஆதரவற்ற இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.50,000 வீதம் ரூ.1,00,000-க்கான காசோலையை வைப்புநிதியினை குழந்தையின் பாட்டி மற்றும் காப்பாளருமாகிய ஆனந்தி அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார்.


 




இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வாணிஈஸ்வரி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.