திண்டுக்கல் மாவட்டம். பழனியில் கருணாநிதியின் 5 ஆயிரம் முக ஓவியங்களை கொண்டு முதல்வர்  ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் சின்னத்தின் ஓவியங்களை வரைந்திருக்கிறார் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்.


பழனி அருகே சத்திரப்பட்டி அரசுப்பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் அன்புச்செல்வன். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பணி புரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்கள் 16,000 பேர் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




இதையடுத்து தற்போது மு க ஸ்டாலின் முதல்வர் ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், 16 ஆயிரம் தற்காலிக ஓவிய ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் முகவடிவம் கொண்ட ஓவியங்கள் 5 ஆயிரத்தை பயன்படுத்தி தமிழக முதல்வர்  ஸ்டாலின் மற்றும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தின் ஓவியங்களை வரைந்துள்ளார்.


 



சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ள இந்த ஓவியங்களை முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நேரில் வழங்க உள்ளதாகவும் ஆசிரியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.