வளர்ச்சி பணிகளை விரைவுப் படுத்தவும் நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரிய சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் நியமிக்கப்பட்டுட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர். காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகை மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார். சில மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்தும் சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை மாற்றம் செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம். நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2. மேற்படி. வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களில்
பின்வருமாறு சில மாற்றங்கள் செய்து அரசு உத்தரவிடுகிறது.
அ) கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திருவள் ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு அ. சக்கரபாணி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
இ) மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு சிவ. வீ. மெய்யநாதன், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.
திரு எஸ். ரகுபதி. மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுகொள்ளப்படுகிறது.
வரிசை எண் வருவாய் மாவட்டம் அமைச்சர் பெயர்கள்
1 சேலம் கே.என்.நேரு. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
2 தேனி ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
3 திருப்பத்தூர் எ.வ.வேலு, பொது பணித்துறை அமைச்சர்
4 கள்ளக்குறிச்சி எ.வ.வேலு, பொது பணித்துறை அமைச்சர்
5 தருமபுரி எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
6 தென்காசி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
7 இராமநாதபுரம் தங்கம் தென்னரசு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
8 காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
9 திருநெல்வேலி ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
10 மயிலாடுதுறை சி.வீ.மெய்யநாதன், சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
11 கோயம்புத்தூர் செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்
12 கிருஷ்ணகிரி அர.சக்கரபாணி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்
13 திருவள்ளூர் ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்
14 பெரம்பலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சர்
15 தஞ்சாவூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
16 நாகப்பட்டினம் எஸ்.ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்