ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன்கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசி, சக்கரை, பருப்பு, பாமாயில் என உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2கோடியே 27 லட்சத்து 5ஆயிரத்து 961 குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதிலு வயது மூத்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் நியாயவிலைக்கடைக்கு சென்று உணவு பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை கருதி தமிழக அரசு சார்பாக தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று  உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. 

Continues below advertisement

வீடு தேடி வரும் உணவு பொருட்கள்

அந்த வகையில் டிசம்பர் மாதம் உணவு பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, 

Continues below advertisement

தேதி அறிவித்த தமிழக அரசு

அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம். தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி. க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும்  நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.