அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டமாகும். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவுகள் வெளியாகாத நிலையில், 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும்.
அரசு ஊழியர்கள் கோரிக்கை
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TETதேர்விலிருந்து விலக்களித்து)ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு. முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தைைமயாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசு ஊரியர்களின் கோரிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்களோடு ஆலோசனை
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் , முதல்வரின் ஒப்புதலின் பெயரில் அமைச்சர் குழு சங்கங்களின் கோரிக்கையை முழுமையாக தெரிவித்தோம் பொங்கலுக்கு முன்பாக நல்ல தீர்வை அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக இந்த கூட்டம் நடத்திய விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை . அரசால் அங்கீகரிக்கபட்ட சங்கங்கள் எல்லாம் உள்ளது அவர்களை அழைக்காமல் மூன்று பேர் ஐந்து பேர் உள்ள சங்கங்களை அழைத்து உள்ளனர். இந்த பட்டியலை தயாரித்தது யார் இதன் மூலம் முதல்வரை அமைச்சரை அவமதிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த முடிவும் எட்டபடாத சூழலில் வரும் டிசம்பர் 29 அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தவர், ஜனவரி 6ஆம் தேதி முதல் காவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என கூறினார்கள். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என உறுதியாக தெரிவித்தார். எங்களது கோரிக்கை தொடர்பாக எந்த வித உத்தரவாதமும் அமைச்சர்கள் குழு அளிக்காத நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அமிர்தகுமார் தெரிவித்தார். இதே போல அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று மாலை தங்களது ஆலோசனை குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.