இந்தியாவின் மூன்றாவது பழமையான பல் மருத்துவக் கல்லூரியாகவும் தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லூரியாகவும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவக் கல்லூரி கடந்த 1953 முதல் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசு பல் மருத்துவக்கல்லூரி ஆகும்.


இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழும் தமிழ்நாடு:


பல் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றிலும் இக்கல்லூரி சிறந்த மையமாக உள்ளது. இக்கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.


தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, ரூபாய் 56.5 கோடியில் தற்போதுள்ள கட்டிடத்துடன் கூடுதலாக நான்கு தளங்கள் கட்ட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


பல் மருத்துவத் துறையில் மகத்தான சாதனை:


இது ஒரு தளத்திற்கு 33.600 சதுர அடி பரப்பளவை உருவாக்கி, மொத்தமாக 1,34,400 சதுர அடியாக இருக்கும். புதிதாக கட்ட இருக்கும் தளங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் 100 புதிய பல் மருத்துவ நாற்காலிகள் 7.59 கோடி ரூபாயில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்த அனுமதியானது பல் கட்டும் துறை, வாய்வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம், பல் ஈறு அறுவை சிகிச்சை துறை போன்ற துறைகளையும் வலுப்படுத்தும். கடந்த மூன்றாண்டுகளாக அரசு பல் மருத்துவ கல்லூரிக்கு வருகைதரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


தமிழ்நாடு அரசின் இந்த ஆணையின்படி அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயனாளிகளின் தரமான பாதுகாப்பான பல் சிகிச்சை மேல்படும். இக்கல்லூரியை இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவ கல்லூரியாக மாற்றுவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


மருத்துவத்துறை மட்டும் இன்றி தொழில்துறையிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1.90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.


இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!