தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.50 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) வெளியிட்டுள்ள தகவலின்படி, வெவ்வேறு 3 இடங்களில் நடைபெற்ற சோதனைகளொல் ரூ.12.50 கோடி மதிப்புள்ளசுமார் 20.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
இலங்கையிலிருந்து ராமநாதபுரத்தின் வடக்குக் கடற்கரையான தங்கச்சிமடம் வழியாக மீன்பிடி படகில் தங்கம் கடத்தப்படுவதாக டி.ஆர்.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள் தங்கச்சிமடத்தின் வடக்குக் கடற்கரை அருகே 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 5.37 கோடி ரூபாய் மதிப்புள்ள 9.063 கிலோ கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றூ (31.07.2023) அன்று இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் அடிப்படையில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழு, ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு விமானத்தை சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த பயணிகளை பரிசோதித்ததில், 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.17 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
டி.ஆர்.ஐ அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே 6 பேரை இடைமறித்து சோதனை செய்தது. இவர்களிடமிருந்து பசை வடிவத்தில் சுமார் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.275 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.