சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிட்டது. 


முன்னதாக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு சாரா இயற்கைப் பாதுகாப்பு அமைப்பன  பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தது.


 






 


மனுவில்," பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் ஆவதற்கு ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் ஐந்தாண்டு அனுபவம் இல்லாத கிரிஜா வைத்தியநாதன் இந்த பதவிக்கு தகுதியற்றவர். எனவே, அவரது நியமனம் விதிமுறைக்கு அப்பாற்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.   


வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வுக்கு நிபுணத்துவ உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதற்கு, பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர். 


  



NGT office order


 


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக 22 டிசம்பர் 2016 அன்று தமிழக ஆளுநரால் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு, 2019 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.