இந்த மூன்று பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து தஞ்சாவூரில்  அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ”நெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது”



தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் இந்த சஞ்சய் காந்தி.
”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை, கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என 5 வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை” என்று அவர் தெரிவித்தார்.


புவிசார் குறியீடு என்றால் என்ன?


ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தக்கூடிய சிறப்பான வடிவங்கள் காணப்படும். அத்தகைய பிரபல்யம் மிக்க பொருட்களை அங்கீகாரம்  செய்வதற்கும் கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதே புவிசார் குறியீடு ஆகும்.

1999 -ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு  உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டார பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டு சட்டத்தின் நோக்கம்.

இந்திய நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு நம் அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடி சேலை, மணப்பாறை முறுக்கு, பழனி பஞ்சாமிர்தம், மார்த்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், நெகமம் காட்டன், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை ,ஆத்தூர் வெற்றிலை, உள்ளிட்ட 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது


மேலும் படிக்க, 


காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை - அரசுடன் ஒப்பந்தம்; 6000 பேருக்கு வேலை


President Visit : முதுமலை யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் வருகை ; சுற்றுலா பயணிகளுக்கு தடை