பா.ஜ.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியை விமர்சித்து காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். 


நடைபயணம் அறிவிப்பு: 


அதில், ”பா.ஜ.க. பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. 


இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும். பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பா.ஜ.க.வின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பா.ஜ.க.வில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பா.ஜ.க.விடம் தர்மம் இல்லை.


காயத்ரி ரகுராம் சொன்ன ரகசியம்:


புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் அதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் உன்னை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள். நீங்கள் வளர்ப்பு மகனின் தந்தையுடன் நெருக்கமாக இல்லாவிட்டால், நீங்கள் வளர மாட்டீர்கள். வளர்ப்பு மகன் உன்னை தந்தையின் அருகில் செல்ல அனுமதிக்க மாட்டான். சிறிய ரகசியம்” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


காயத்ரி ரகுராம் நீக்கம்:


முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்படி, ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த காயத்ரி ரகுராமை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக, அண்மையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.


இதுதொடர்பாக வெளியிட்டு இருந்த டிவிட்டர் அறிக்கையில், இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”எனது தொழில், பெயரை கெடுத்ததற்கும், அவமானப்படுத்தியதற்கும், எனது சேவை, உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கும் பாஜகவிற்கு நன்றி. ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான். விரைவில் களத்தில் சந்திப்போம்” என அடுத்தடுத்து டிவிட்களை பதிவிட்டுள்ளார்.