அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு:


 




அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மயிலம்பட்டியில், 26 மி .மீ., மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு,  வினாடிக்கு, 272 கனஅடியாக தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 377 கன அடியாக அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 61.88 அடியாக இருந்தது.


மாயனூர் கதவணை:


 




 


கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,614 கன அடியாக இருந்தது. நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,725 கனஅடியாக அதிகரித்தது. தென்கரை பாசன வாய்க்கால், கீழ்கட்டளை வாய்க்கால் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


ஆத்துப்பாளையம் அணை:


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு,  நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை .26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.10 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


மழை நிலவரம்:


 




 


 


மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து அந்த பகுதிகளை குளிர்வித்துவருகிறது. ஆனால், வழக்கமாக இந்த சமயங்களில் கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், அதற்கு மாறாக, கடந்த 2 மாதங்களாக கோடைக்கு நிகராக வெயில் வாட்டி வதக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனால் கரூர் மாவட்டத்திலும் மழை பெய்யும் என அனைவரும்          எதிர்பார்த்தனர். ஆனால் மழைக்கு பதிலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்,  128 . 20 மி.மீ., மழை பெய்திருந்தது. இதனைத் தடர்ந்து  கரூர் 1.4 மி.மீ., குளித்தலை 4 மி. மீ., தோகைமலை 8 மி.மி., கிருஷ்ணராயபுரம் 2  மி.மீ., மாயனூர் 2 மி. மீ., பஞ்சம்பட்டி 2 மி. மீ., கடவூர் 5 மி.மீ., பாலவிடுதி   22.2 மி.மீ., மயிலம்பட்டி 26மி. மீ,. என மாவட்டம் முழுவதும் 72 . 60 மி.   மீ,. மழை பெய்திருந்தது. இதன் சராசரி 6.05 ஆக உள்ளது.