நெருங்கும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வகையில்  மக்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவிக்கவுள்ளது. மேலும் பல திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகையானது கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 1.15 கோடி பேர் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டதை விரிவுப்படுத்தும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது. போட்டி போட்டு சுமார் 28 லட்சம் பேர் புதிதாக மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.

Continues below advertisement

அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியிடும் அரசு

28 லட்சம் மனுக்கள் சரிபார்க்கப்பட்டு மகளிர்களுக்கு வருகிற டிசம்பர் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார். அடுத்ததாக தமிழக அரசு சூப்பரான திட்டத்தை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. கல்லூரி மாணவர்களுக்கு 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மடிக்கணிணி வழங்குவதற்கான பணியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற டிசம்பர் 19 ஆம் தேதிகளில் மடிக்கணிணி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.  

Continues below advertisement

 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் டேப்லெட் அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு பிரபல கணினி நிறுவனங்கள் பங்கேற்றது. இறுதியாக முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு   தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கியுள்ளது.  

எப்போது லேப்டாப் வழங்கப்படும்- அரசு முக்கிய முடிவு

இதன்படி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் 3வது வாரம் மத்தியில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விழாவானது வருகிற 19 ஆம் தேதி நடத்த ஆலோசனை நடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என்று 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திமுக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.