முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்தில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, 7 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தநிலையில், 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களின் படி, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதமாக செயல்பட்டதாக விசாரணை கமிட்டி இவர் மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. 2010-14 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பஞ்சாபில் ஒரு மின் திட்டத்திற்காக 250 சீன பயனர்களின் விசாவை எளிதாக்குவதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக தெரிவித்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சோதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.
என் பெயர் குறிப்பிடப்படாத FIR-ஐ என்னிடம் காண்பித்தார்கள். சோதனை செய்த குழு எதையும் கண்டுபிடிக்கவுமில்லை, கைப்பற்றவுமில்லை. சோதனை செய்த நேரம்தான் சுவாரஸ்யமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்